2012-10-17 15:47:57

சிரியாவில் வெளிநாட்டு இசுலாம் தீவிரவாதிகள் இருப்பது, சண்டையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும், ஐ.நா.அச்சம்


அக்.17,2012. "jihadists" எனப்படும் இசுலாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் சிரியாவில் இருப்பது, அந்நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் சண்டையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்ற கவலையை வெளியிட்டுள்ளார், மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. புலன்விசாரணையாளர் Paulo Sergio Pinheiro.
இதற்கிடையே, கடந்த 18 மாதங்களில் 16,500க்கு மேற்பட்ட சிரியா நாட்டினர் ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக UNHCR என்ற ஐ.நா.அகதிகள் நிறுவனம் கூறியது.
இதுவரை ஏறக்குறைய 3,50,000 சிரியா மக்கள், ஈராக், ஜோர்டன், லெபனன், துருக்கி ஆகிய நாடுகளின் அகதிகள் முகாம்களிலும் குடும்பங்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் UNHCR நிறுவனம் கூறியது.







All the contents on this site are copyrighted ©.