2012-10-15 16:54:38

இந்தியாவின் மிசோராமில் சிறுவர்கள் பெருமளவில் போதைப்பொருள்களுக்கு அடிமை


அக்.15,2012. இந்தியாவின் மிசோராமில் போதைப்பொருட்களின் பிடியிலிருந்து சிறார்கள் காப்பாற்றப்படவேண்டிய தேவை உள்ளதாகவும், 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சிறார்கள்வரை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும், சிறார் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய அவையின் பிரதிநிதி கூறினார்.
சிறார்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதும், போதைப்பொருள்கள் எளிதாக கிட்டுவதும் மிசோரோம் மாநிலத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக இருப்பதாக தெரிவித்தார் அப்பிரதிநிதி மிஷ்ரா.
10 வயதிலேயே சிறார்கள் தங்கள் உடலில் ஊசி மூலம் போதைமருந்தை ஏற்றும் பழக்கம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் செயலல்ல, இது குறித்து மாநில அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார் அவர்.
ஏற்கனவே மிஸ்ரா, அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மணிப்பூரில் போதைப்பொருள் பிரச்சனை குறித்து ஆராயும்நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.