2012-10-13 15:58:28

FABCன் நவம்பர் பொதுக் கூட்டத்துக்குத் திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி


அக்.13,2012. வருகிற நவம்பர் 19 முதல் 25 வரை வியட்நாமில் நடைபெறவிருக்கும் FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பத்தாவது பொதுக் கூட்டத்துக்கு, பிலிப்பீன்சின் மனிலா பேராயர் கர்தினால் Gaudencio B. Rosalesஐ தனது சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வியட்நாம் கம்யுனிச நாட்டில் இத்தகைய கூட்டம் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
வியட்நாமின் Xuân Lȏc மறைமாவட்ட மேய்ப்புப்பணி மையத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தின் நிறைவு நிகழ்வு Ho Chi Minh நகரப் பேராலயத்தில் இடம்பெறும்.
19 ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான FABCன் பொதுச்செயலாளராக இருப்பவர் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
21ம் நூற்றாண்டில் ஆசியத் திருஅவை எதிர்கொள்ளும் மேய்ப்புப்பணி சவால்கள் குறித்து நடைபெறவுள்ள இந்த நவம்பர் கூட்டத்தில் ஆயர்கள், இறையியலாளர்கள், திருஅவைத் தலைவர்கள் என ஏறக்குறைய நூறு பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2012ம் ஆண்டில் இந்த FABC கூட்டமைப்பு தனது 40ம் ஆண்டைச் சிறப்பிக்கிறது







All the contents on this site are copyrighted ©.