2012-10-10 15:30:52

அமெரிக்கர்களில் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் பாதிக்கும் குறைவே: புதிய ஆய்வு


அக்.10,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 48 விழுக்காட்டினர் பிரிந்த கிறிஸ்தவ சபையினர், 22 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் மற்றும் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் எம்மதத்தையும் சாராதவர்கள் என்று மதம் மற்றும் பொது வாழ்வு குறித்த Pew அமைப்பு எடுத்த புதிய ஆய்வு கூறுகிறது.
1972ம் ஆண்டில் 62 விழுக்காட்டு அமெரிக்கர்கள் பிரிந்த கிறிஸ்தவ சபையினர் என்றும், 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்றும், 7 விழுக்காட்டினர் எம்மதத்தையும் சாராதவர்கள் என்றும் தங்களைக் காட்டிக் கொண்டனர், ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.