2012-10-09 16:45:11

வெனெசுவேலாவின் புதிய அரசுத்தலைவருக்குத் தலத்திருஅவை வரவேற்பு


அக்.09,2012. தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் 54.42 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று நான்காவது தடவையாக அந்நாட்டின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹூகோ சாவேஸ் ஃபிரியாசை Chiquinquirá அன்னைமரி விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது தலத்திருஅவை.
2019ம் ஆண்டு வரை பதவியில் இருக்கவுள்ள அரசுத்தலைவர் ஹூகோ சாவேஸ், வருகிற நவம்பர் 18ம் தேதி நடக்கவுள்ள Chiquinquirá அன்னைமரி விழாத் திருப்பலியில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அப்பசிலிக்கா அதிபர் அருள்பணி Eleuterio Cuevas தெரிவித்தார்.
வெனெசுவேலா தனது சனநாயக சோசலிஸ பாதையில் தொடர்ந்து வீறுகொண்டு பயணிக்கும் என்று ஹூகோ சாவேஸ், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இலத்தீன் அமெரிக்காவிலிருந்து, அமெரிக்கா ஐக்கிய நாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் தலைவர்களில் 58 வயதான ஹூகோ சாவேஸ் அதிபர் சாவேஸ் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.
எண்ணெய்வளம் மற்றும் இயற்கை வாயு என உலகின் பெரும்பங்கு இயற்கைவளப் படிமங்களை கொண்ட நாடு வெனெசுவேலா என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.