2012-10-08 17:04:48

அணுக்கதிர் வீச்சு அச்சத்தினால் Fukushima நகர் மக்களை தனிமைப்படுத்தி வைக்கும் நிலை


அக். 10, 2012. ஜப்பானில் கடந்த ஆண்டு அணுஆலை விபத்து மூலம் பாதிக்கப்பட்ட Fukushima நகர் மக்கள் ஏனையஅந்நாட்டு மக்களால் அச்சத்தின் காரணமாகஒதுக்கி வைக்கப்படுவதாககவலையை வெளியிட்டார் அப்பகுதி ஆயர் ஒருவர்.
அணுக்கதிர் வீச்சு பரவலாம் என்றஅச்சத்தின் காரணமாகஜப்பானின் ஏனையபகுதி மக்கள் Fukushima நகர் மக்களை, சமூகமற்றும் பொருளாதாரரீதியாகதனிமைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார் Sendai ஆயர் Martin Tetsuo Hiraga
ஜப்பான் முழுமைக்கும் மின்சாரம் வழங்கி வந்த Fukushima அணுமின் நிலையம் விபத்துக்குள்ளாகியதால் தங்கள் பகுதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது ஏனைய பகுதி மக்களால் ஒதுக்கி வைக்கப்படும் நிலைகளையும் இம்மக்கள் அனுபவிக்க வேண்டியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்றார் ஆயர்.
அணுக்கதிர் ஆலைகள் கட்டப்படும்போதே ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு பிரிவுகள் உருவாவதுடன், பணிபுரிவோர் அணுக்கதிர் வீச்சுக்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ளது என்ற ஆயர், Fukushima வில் பாதிப்புக்கு உள்ளான மக்கள் வெளி நகர் பள்ளிகளில் பயில ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி இடம்பெற்ற சுனாமி மற்றும் அது தொடர்பான அணுஆலை விபத்தில் 19 ஆயிரம்பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.