2012-10-03 16:07:26

அமெரிக்க அரசும் பிறரன்பு நிறுவனங்களும் ஏழ்மையை அகற்றுவதற்கு முயற்சிக்குமாறு நியுயார்க் ஆயர்கள் வேண்டுகோள்


அக்.03,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசும் அந்நாட்டின் அரசு-சாரா பிறரன்பு நிறுவனங்களும் அந்நாட்டில் நிலவும் கடும் ஏழ்மையை அகற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சிக்குமாறும், இம்முயற்சியில் ஏழைகளின் மனித மாண்பு மதிக்கப்படுமாறும் நியுயார்க் தலத்திருஅவைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன், புரூக்ளின் ஆயர் நிக்கோலாஸ் திமார்சியோ ஆகிய இருவரும் புனித வின்சென்ட் தெ பவுல் விழாவையொட்டி இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ஏழைகள் தங்கள் வாழ்க்கையின் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் பிறரன்பு நிறுவனங்கள் கவனமுடன் செயல்படுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
17ம் நூற்றாண்டுப் புனிதராகிய வின்சென்ட் தெ பவுல், ஏழைகள்மீது மிகுந்த கவனம் செலுத்தியவர். அவர் பெயரால் திருஅவையில் தொடர்ந்து பிறரன்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.