2012-10-01 15:57:45

இந்தியாவில் வாரத்திற்கு 4 சிறுத்தைகள் வேட்டையாடப்படுகின்றன


அக்.01, 2012. இந்தியாவின் தேசிய விலங்கான புலியைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு சிறுத்தைப் புலிகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளதாகவும், வாரத்திற்கு நான்கு சிறுத்தைப் புலிகள் வேட்டையாடப்படுவதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறுத்தைப் புலியை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை இருக்கின்றபோதிலும், 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுக்கு இடையே 420 சம்பவங்களில் சிறுத்தையின் உடல் பாகங்கள், தோல், எலும்புகள் முதலியவை பிடிபட்டுள்ளன என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
வட இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்தில் சிறுத்தைகள் அதிகளவு வேட்டையாடப்படுவதாகவும் சிறுத்தைத் தோல், எலும்புகள் உள்ளிட்ட பாகங்கள் கைமாறும் மையமாக டில்லி இருப்பதாகவும் இந்த ஆய்வுக் கண்டறிந்துள்ளது.
இந்த நூற்றாண்டில் முதல் 10 ஆண்டுகளில் 2,294 சிறுத்தைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.