2012-09-29 15:41:27

இஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி குறித்து காரித்தாஸ் எச்சரிக்கை


செப்.29,2012. இஸ்பெயின் நாட்டில் உதவிக்காகக் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கும்வேளை, அந்நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைக் களைவதற்கு திட்டவட்டமான நடவடிக்கைகளை அரசு எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது அந்நாட்டுக் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம்.
இஸ்பெயின் ஆயர்களின் பிறரன்பு நிறுவனமான காரித்தாஸ், வேலைகள் இழப்பாலும், வருவாய்க் குறைவதாலும், சமுதாய ஆதரவுக் குறைவுபடுவதாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனவும் கூறியது.
கடந்த நான்கு ஆண்டுகளில் காரித்தாஸிடமிருந்து உதவி பெற்ற மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியிருக்கிறது என்றும், ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 4 கோடியே 30 இலட்சம் டாலரை இவ்வுதவி நிறுவனம் மக்களுக்கு கொடுத்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இஸ்பெயின் வங்கிகள் தொடர்ந்து இயங்குவதற்கு 5,930 கோடி யூரோக்கள் தேவைப்படுவதாகச் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.