2012-09-27 15:54:22

திருஅவை : அனைத்துலக கடல்சார் தினம்


செப்.27,2012. கடலில் பாதுகாப்பு என்ற தலைப்பில் அனைத்துலக கடல்சார் தினத்தை இவ்வியாழனன்று சிறப்பித்தது திருஅவை.
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், கடல்சார்ந்த தொழில்செய்வோர்க்கென மேய்ப்புப்பணி அமைப்பை உருவாக்கியதிலிருந்து, கடல்பயணம் செய்வோர் மற்றும் கடல்சார்தொழில் செய்வோரின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு நடவடிக்கைகளில் ஆண்டுதோறும் இந்த உலக தினத்தன்று திருஅவை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
மேலும், செப்டம்பர் 27, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக கடல்சார் தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், புதிதாக உருவாக்கப்படும் பயணியர் கப்பல்கள் மிகுந்த பாதுகாப்புக்களைக் கொண்டிருக்குமாறு வலியுறுத்தினார்.
1912ம் ஆண்டில் டைட்டானிக் பயணிகள் கப்பல் பனிப்பாறையில் மோதிக் கடலில் மூழ்கியதன் நூறாம் ஆண்டு இந்த 2012ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது, இதில் 1500க்கும் அதிகமானோர் இறந்தனர், 1914ம் ஆண்டு சனவரியில் இலண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கடல்பயணம் செய்வோர் மற்றும் கடல்சார்தொழில் செய்வோரின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் உருவாக இந்த டைட்டானிக் கப்பல் விபத்தே காரணமானது என்றும் பான் கி மூன் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.