2012-09-25 15:24:18

செப்டம்பர் 26, கவிதைக் கனவுகள்... குடும்பம்


எழுத்து.காம் என்ற இணையதளத்தில் குடும்பம் என்ற தலைப்பில் வெளியான கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதையிலிருந்து ஒரு பகுதி

சகடத்தில் ஏறிவிட்டால் தாழ்ந்தும் உயர்ந்தும் வரும்
இருட்டு வெளிச்சமென இரண்டு வைத்தான் பேரிறைவன்.
இன்ப துன்பங்களுக்கு இதுதான் நியதி என்றான்!
கோடை வெயிலடித்துக் கொளுத்துகின்ற வேளையிலே
அம்மா மழைஎன் றலறுகிறோம், மழைவந்து
வெள்ளம் பெருக்கெடுத்து வீதியையே மூழ்கடித்தால்
வெய்யிலையே தேடி விடிகதிரை வணங்குகிறோம்!
கூடும் குறையும் குறைந்ததெல்லாம் வளமாகும்
எப்போது எது நடக்கும் இறைவனுக்குத் தான் தெரியும்.

நடைபோடும் யந்திரங்கள் இவ்வுலகில் ஏதுமில்லை
போடும் நடையைப் பொடி நடையாய்ப் போடுங்கள்
நடைபோடும் வேலைதான் நாம்செய்யக் கூடுவது
பார்த்து நடந்து பக்குவமாய்த் தொடருங்கள்
அப்போதும் முதுகினிலே அடிவிழுந்தால் எல்லாமே
தப்பாத ஈசன் சாட்டை யென எண்ணுங்கள்
கண்ணீரால் எந்நாளும் கவலை மறைவதில்லை
விண்ணாளும் வேந்தன் வீடுசெல்லும் காலம்வரை
எண்ணுவன எண்ணுங்கள், இயங்குங்கள் துன்பமில்லை.







All the contents on this site are copyrighted ©.