2012-09-25 15:52:36

ஆப்ரிக்காவில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது


செப்.25,2012. ஆப்ரிக்கக் கண்டத்தில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாக புதிய மதங்கள் குறித்து ஆய்வு செய்யும் CESNUR மையம் அறிவித்தது.
மொரோக்கோவின் El Jadida பல்கலைக்கழகத்தில் CESNUR மையம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசிய இம்மையத்தின் தலைவர் Massimo Introvigne, தற்போது ஆப்ரிக்க மக்களில் கிறிஸ்தவர்கள் 46.53 விழுக்காடும் முஸ்லீம்கள் 40.46 விழுக்காடும், ஆப்ரிக்க மரபு மதத்தினர் 11.8 விழுக்காடும் உள்ளனர் என அறிவித்தார்.
ஆப்ரிக்கக் கண்டத்தில் 31 நாடுகளில் கிறிஸ்தவர்களும், 21 நாடுகளில் முஸ்லீம்களும், 6 நாடுகளில் ஆப்ரிக்க மரபு மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர் எனவும் அம்மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1900மாம் ஆண்டில் ஒரு கோடிக் கிறிஸ்தவர்கள் இருந்த ஆப்ரிக்காவில் 2012ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 50 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத்தை அனுசரிக்கும் மக்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் கத்தோலிக்கத்தை அனுசரிக்கும் மக்களைவிட அதிகம் என்றும் இத்தாலிய சமூகவியலாளரான Massimo Introvigne அறிவித்தார். இக்கூட்டத்தில் 18 நாடுகளிலிருந்து சுமார் 70 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.