2012-09-22 15:29:39

பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு அழைப்பு


செப்.22,2012. பாகிஸ்தானின் தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் சிறுபான்மை சமயத்தவரின் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதற்கு அது காரணமாக அமைகின்றது என்று சொல்லி தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது.
தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து விசாரணை செய்வதற்கு திறமைமிகுந்த ஒரு விசாரணைக் குழுவை அரசு உடனடியாக உருவாக்கி, இந்த இன்னல்நிறைந்த சூழல்களிலிருந்து மக்கள் வெளிவருவதற்குப் பரிந்துரைகளை முன்வைக்குமாறும் கேட்டுள்ளது WCC மன்றம்.
உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் இவ்வாரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் பலரிடமிருந்து கருத்துக்களைக் கேட்ட பின்னர் இவ்வாறு பாகிஸ்தான் அரசை விண்ணப்பித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.