2012-09-22 15:31:35

உலக அளவில் சமய சுதந்திரம் குறைந்து வருகிறது


செப்.22,2012. உலக அளவில் சமய சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் மிகவும் பொதுவானதாக மாறி வருகின்றன என்று பியு என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
அரசின் நடவடிக்கையால் அல்லது ஒரு மதத்தின் மீதான பொதுப்படையான வெறுப்பினால் சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் நாடுகளில் உலகின் 75 விழுக்காட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
உலகின் 37 விழுக்காட்டு நாடுகளில் சமய சுதந்திரம் மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று, இந்த பியு அமைப்பின் 2010ம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரம் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றது, எனவே கத்தோலிக்கர் இதற்கு உடனடியாகத் துணிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜமெய்க்காவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.