2012-09-19 16:03:15

உலகில் அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள் , ஐ.நா.வின் பட்டியலில் இலங்கை


செப்.19,2012. உலகில் அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள் என ஐ.நா பட்டியலிட்டிருக்கும் பதினாறு நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டுவரும் நாடுகளின் அரசுகள் தண்டிக்கப்படாத நிலையிலேயே இருப்பதாக ஐ.நா.வின் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
2011ம் ஆண்டு ஜூன் முதல், 2012ம் ஆண்டு ஜூலை வரையிலான நிலவரத்தின்படி ஐ.நா குறிப்பிட்டுள்ள 16 நாடுகளில், இலங்கை அல்ஜீரியா, பஹ்ரைன், பெலாருஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஜகஸ்தான், கென்யா, லெபனன், மலாவி, ருவாண்டா, சவுதி அரேபியா, சூடான், உஸ்பெகிஸ்தான், வெனிசுலா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பழிவாங்கும் நோக்குடனான செயல்பாடுகளும் தனிநபர்க்கெதிரான அச்சுறுத்தல்களும் தொடர்ந்து பதிவாகி வருவதையும், அரசு அதிகாரிகளாலும் உயர்மட்ட அதிகாரிகளின் பொது அறிக்கைகளினாலும் அப்பாவி பொதுமக்கள், அச்சுறுத்தல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுவதையும் ஐ.நா மனித உரிமை அவையின் உயர் இயக்குனர் நவிபிள்ளை ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.