2012-09-19 15:59:29

ஆசியான் நாடுகளின் முன்னேற்றத்துக்குக் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் எடுத்துக்காட்டு


செப்.19,2012. எழுத்தறிவு பெற்றவர்களின்நிலை சராசரி விகிதத்துக்கும் குறைவாய் இருக்கின்ற தாய்லாந்தின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என்று ASEAN அமைப்பு கூறியது.
ASEAN அமைப்பின் வளர்ச்சித் திட்டங்களில் கல்வியும் ஒன்று என்றுரைத்த தாய்லாந்து நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் Chinnaworn Boonyakiat, ASEAN அமைப்பு நாடுகளுக்கு 2015ம் ஆண்டுக்குள் தாய்லாந்தின் கல்வி எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
தாய்லாந்தில் பள்ளிகளைச் சீர்திருத்துவதற்கென அந்நாட்டு ஆயர் பேரவை நடத்திய கருத்தரங்கில் பேசிய Boonyakiat இவ்வாறு கூறினார்.
இக்கருத்தரங்கில் அந்நாட்டின் பல்வேறு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் 465 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ASEAN சமுதாய நாடுகள் சூழலில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் என்ற தலைப்பில் தாய்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Louis Chamniern Santisukniranனின் அறிக்கை இக்கருத்தரங்கில் முதலில் வாசிக்கப்பட்டது.
ASEAN அமைப்பு, பத்து தென்கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பாகும்.







All the contents on this site are copyrighted ©.