2012-09-18 15:16:03

மியான்மாரில் குறைந்தது 89 அரசியல் கைதிகள் விடுதலை


செப்.18,2012. மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் Aung San Suu Kyi அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர் இத்திங்கள் மாலை குறைந்தது 89 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது மியான்மார் அரசு.
மியான்மாரில் எஞ்சியுள்ள அரசியல் கைதிகளில் குறைந்தது 89 பேரும், வெளிநாட்டுக் கைதிகள் பலரும் என 514 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும், மியான்மார் அரசுத்தலைவர் Thein Sein நியுயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் சில ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
மியான்மாரில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக கடந்த ஆண்டில் 600க்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.