2012-09-14 17:21:08

உலகில் மத விடுதலையை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகளுக்கு வேண்டுகோள்


செப். 14, 2012. உலகில் பிரச்சனைகள் இடம்பெறும் பகுதிகளில் பாதுகாப்பையும் நிலையான தன்மையையும் அதிகரிக்கும் நோக்கில் அனைத்து நாடுகளிலும் மத விடுதலையை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரியும் அரசியல் வல்லுனருமான Thomas Farr.
மத அமைதி மற்றும் உலக விவகாரங்கள் குறித்த Georgetown பல்கலைக்கழக மையத்தின் மத சுதந்திரப் பணிகளுக்கான திட்டத்தின் இயக்குனர் Farr உரைக்கையில், மத சுதந்திரம் என்பது, வழிபடுவதற்கான சுதந்திரத்தை மட்டுமன்றி, விசுவாசத்தின் அனைத்துக் கூறுகளையும் மற்றும் மனிதரின் மனச்சான்றுக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மத விரோத எண்ணங்கள் அதிகரித்து வருகின்றன மற்றும் இசுலாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பவைகளை மனதிற்கொண்டு, அமெரிக்க ஐக்கிய ஐக்கிய நாடு தன் வெளிநாட்டுக் கொள்கைகளில் மத உரிமைகளூக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் அவர்.
மனித குல சமுதாய வளர்ச்சிக்கும் மனித மாண்புக்கும் மத சுதந்திரம் இன்றியமையாத ஒன்று என்ற மனப்போக்கு மக்களில் மாறி வருகிறது என்ற கவலையையும் வெளியிட்டார் முன்னாள் அதிகாரி Farr.








All the contents on this site are copyrighted ©.