2012-09-13 16:33:58

இடிந்தகரை மாதா கோவிலில் காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு கர்தினால் கண்டனம்


செப்.13,2012. கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரானபோராட்டங்கள் இடம்பெறும் இடிந்தகரை என்ற ஊரிலுள்ள லூர்து அன்னை ஆலயத்திற்குள் காவல்துறையினர் புகுந்து மாதா திருஉருவங்களைச் சேதப்படுத்தியுள்ளது வெட்கத்திற்குரியச் செயல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் இந்தியஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias.
பொது இடங்களையும் வழிபாட்டுத்தலங்களையும் பாதுகாக்கவேண்டிய காவல்துறையினரே கோவிலுக்குள் புகுந்து அன்னைமரி திருவுருவங்களை உடைத்து அவைகளை அவமானப்படுத்தியுள்ளது, எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒரு செயல் மட்டுமல்ல, பாரத தேசிய மனச்சான்றுக்கே ஒரு சவாலாக உள்ளது என்றார் கர்தினால் Gracias.
உதவி தேவைப்படும் அனைத்து மக்களுடனும் ஒருமைப்பாட்டை அறிவித்து வரும் கத்தோலிக்கத் திருஅவை, உண்மை வளர்ச்சி என்பது மனித குல மாண்பை பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிச் செய்யவும் உழைக்கிறது என்றார் கர்தினால் Gracias.








All the contents on this site are copyrighted ©.