2012-09-11 16:39:59

நாட்டின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகள் இந்திய மக்களிடம் குறைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது


செப்.11,2012. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதும், அரசியல் வாதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், அந்நாட்டின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளை இந்திய மக்களிடம் குறைத்துள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
PEW ஆய்வு மையம் நடத்திய அண்மை ஆய்வுகளின்படி, இந்திய மக்கள்தொகையில் 38 விழுக்காட்டினரே இந்த நாட்டின் வளர்ச்சி நிலைப்பாடு குறித்து மனநிறைவு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது கடந்த ஆண்டைவிட 13 விழுக்காடு குறைவாகும். சீனாவில் 82 விழுக்காட்டினரும், பிரசில் நாட்டில் 53 விழுக்காட்டினரும் தங்கள் அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து மனநிறைவு கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்க, இந்தியாவிலோ இது வெறும் 38 விழுக்காடாக உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 29 விழுக்காட்டினரே தங்கள் நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அணமை ஆய்வில் கலந்துகொண்ட இந்தியர்களுள் 10க்கு எட்டுபேர், இந்தியாவின் முக்கிய பிரச்னைகளாக, பொருளாதார சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பொருட்கள் விலையேற்றம் ஆகியவைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.