2012-09-07 16:12:20

திருத்தந்தையின் பொது நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்க, கேட்க, வாசிக்க உதவும் புது தொழில்நுட்பம்


செப்.07,2012. திருத்தந்தை கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்ப்பதற்கும், கேட்பதற்கும், அது குறித்து வாசிப்பதற்கும் நேயர்களுக்கு உதவும் நோக்கில் அன்ட்ராய்டு தொழில்நுட்பத்தின்கீழ் ஒரு புது பயன்பாட்டுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது வத்திக்கான் வானொலி.
திருத்தந்தையின் தினசரி பொதுசந்திப்புகள் உட்படதிரு அவையின் பல்வேறு நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் ஒரே வலைத்தளநுட்பம் வழி அறியஉதவும் இது, தற்போது ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம் மற்றும் ஃப்ரெஞ்ச் மொழிகளில், திருத்தந்தையின் தினசரி திட்டங்களை விளக்கமாக, பல்வேறு தொடர்புகளுடன் வழங்குவதாகஇருக்கும். படிப்படியாக, வத்திக்கான் வானொலியின் ஏனைய 39 மொழிகளிலும் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் தொலைக்காட்சி மையத்துடன் இணைந்து ஆற்றப்படும் இச்சேவையில், திருத்தந்தையின் பொதுசந்திப்புகள் தொடர்புடையஒலி ஒளி காட்சிகளும் இடம்பெறும். அன்ட்ராய்டுக்கெனவத்திக்கான் வானொலி தயாரித்துள்ளஇந்ததொழில்நுட்பத்தை நேயர்கள் http://rv.va/android என்றவலைத்தளத்திற்குச் சென்று இலவசமாகபதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.








All the contents on this site are copyrighted ©.