2012-09-06 15:10:58

வேதியப் பொருட்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளால் உருவாகும் ஆபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு : ஐ.நா.


செப்.06,2012. வேதியப் பொருட்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளால் உருவாகும் ஆபத்துக்கள் நாளுக்கு நாள் கூடிவருகிறது என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
வேதியப் பொருட்களின் பயன்பாடும், அவைகளின் கழிவுகளைச் சுற்றுச் சூழலில் கலக்கும் வழிமுறைகளும் சரியான முறையில் கண்காணிக்கப்படுவதற்கு மிகக் கடுமையான வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று UNEP எனப்படும் ஐ.நா.சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.
தொழிற் சாலைகள் உருவாக்கும் வேதியக் கழிவுகள் இயற்கையில் கலப்பதால், நிலத்தடி நீர், காற்று இவைகளின் நச்சுத்தன்மை, மற்றும் வேதியப் பொருள் மழை என்ற பல ஆபத்துக்களுக்கு அரசுகள் பதில் கூறவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று WHO அதிகாரி Maria Neira கூறினார்.
ஏழை நாடுகளிலும், செல்வம் மிகுந்த நாடுகளிலும் இந்த ஆபத்துக்களை உருவாக்கும் தொழிலதிபர்கள் கேள்விகளுக்கு உள்ளவதில்லை, மாறாக, அரசுகள் கேள்விகளுக்குள்ளாகின்றன என்று ஐ.நா.வின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.








All the contents on this site are copyrighted ©.