2012-09-06 13:40:51

கவிதைக் கனவுகள் - உன் அம்மா... (இணையத்திலிருந்து)


உன் அம்மா
நீ அழுவதைப் பார்த்து
சிரித்த ஒரேயொரு நாள்
நீ பிறந்த நாள் மட்டுமே!!!......

எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாத உறவு
இவ்வுலகில் ஒன்று இருக்குமானால்
அது உன் தாய் உறவு மட்டுமே!!!.....

உன் அம்மா தியாகத்தின்
மனித வடிவம்!!!...

உன் அம்மாவின் அன்பு முழுமையானது, அது
எத்தனை பேருக்கு
எத்தனை தடவைகள்
பகிர்ந்து கொடுக்கப்பட்டாலும்!!!....

உன் அம்மா சொல்கிறார்...
சப்தமின்றி நீ கொடுக்கும் முத்தங்களை
இரசிக்கையிலே
செத்துவிடத் தோணுகின்ற
துன்பங்கள்கூட கையசைத்துப் பறக்கிறது
உன் மழலையின் கொஞ்சலுக்குத்தான்
எத்தனை வலிமை!!!....

அம்மா
நீ என்னைக்
குளிப்பாட்டி உணவூட்டி
உன்மடியில்
நான் உறங்கிய காலம்
என் வாழ்வின் வசந்த காலம்..
நீ என்றென்றும் வாழ்க!!!...







All the contents on this site are copyrighted ©.