2012-09-03 16:53:07

மானுட விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பாகும்: கர்தினால் மால்கம் இரஞ்சித்


செப்.03,2012. கொழும்பில் நடைபெற்ற, உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தொடர்பு அமைப்பான Signis 36வது விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் மால்கம் இரஞ்சித், மனித உரிமை மற்றும் மானுட விழுமியங்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காது சில ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர் என கவலையை வெளியிட்டதோடு, ஊடகங்கள் இழிவான எண்ணங்களுக்கு அடிபணியக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
மானுட விழுமியங்களை பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பாகும் எனவும் கர்தினால் இரஞ்சித் தெரிவித்தார்.
வர்த்தக நோக்கங்களினால், ஊடக விதிகள் ஒழுக்க முறைமைகளுக்கு முரணான செயற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன எனஉரைத்தகர்தினால், இலங்கையில் ஊடகவியலாளர்களைக் கடத்தியுள்ளமற்றும் கொலை செய்த நபர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதுடன், சில ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.