2012-09-03 16:49:19

உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை : பிரசில் கர்தினால்


செப்.03,2012. கருணைக்கொலை குறித்து பிரசில் மருத்துவக்கழகத்தால் முன்மொழியப்பட்ட தீர்மானம் புதியசட்டமும் அல்ல, கருணைக் கொலைக்கானஅனுமதியும் அல்லஎனஎடுத்துரைத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் ரெய்முந்தோ டமசேனோ அசிஸ்.
கருணைக்கொலை குறித்தமருத்துவக்கழகத்தின் தீர்மானம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டக் கேள்விக்கு பதிலளித்தகர்தினால், குணப்படுத்தமுடியா நிலையில் இருக்கும் நோயாளிகள் நடத்தப்படவேண்டியவழிமுறைகளை அது காட்டுகின்றதேயொழிய, கருணைக் கொலையை அனுமதிக்கவில்லை என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முதன்முதலாகப் பெறும் கொடையானஉயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என்றகர்தினால், வாழ்வின் துவக்கம் முதல் இயற்கையானமரணம் வரை அது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற திருஅவை படிப்பினைகளையும் சுட்டிக்காட்டினார்.
ஒரு நோயாளியின் விருப்பப்படியோ அல்லது அவரின் சட்டப் பிரதிநிதியின் விண்ணப்பத்தின் பேரிலேயோ எந்தநோயாளியின் உயிரும் பறிக்கப்படக்கூடாது என்பது மட்டுமல்ல, முடிந்தஅளவு அனைத்து வளங்களையும் பயன்படுத்தி ஒவ்வோர் உயிரும் காப்பாற்றப்படவேண்டும் என்றவிண்ணப்பத்தையும் முன்வைத்தார் கர்தினால் டமசேனோ அசிஸ்.







All the contents on this site are copyrighted ©.