2012-09-03 16:55:27

இலங்கை அரசு மீது ஆம்னஸ்டி மனித உரிமைகள் கழகம் குற்றச்சாட்டு


செப்.03,2012. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், அங்கு குற்றவாளிகள் தண்டனை இன்றி தமது நடவடிக்கைகளைத் தொடருவதற்கான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆட்களை குற்றம் எதுவும் சுமத்தாமல், அவர்களுக்கு எதிராக வழக்குகளை நடத்தாமல் தடுத்து வைப்பதற்கு அரசு இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும், இதனைப் பயன்படுத்தி, மாற்றுக்கருத்தாளர்களை வாய் மூடச்செய்து, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்திலும் பல குறைகள் காணப்படுவதாகவும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.