2012-08-31 16:01:02

இலங்கை அகதிகளை பசிபிக் தீவுகளுக்கு மாற்றும் திட்டம் அடுத்த மாதம் அமல் - ஆஸ்திரேலியா


ஆக.31,2012. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்களை நௌரு மற்றும் பாப்புவா நியுகினித் தீவுகளில் அமைக்கப்படும் முகாம்களுக்கு மாற்றுவது குறித்த சட்டம் அடுத்த மாதத்தில் நடைமுறைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, கிறிஸ்மஸ் தீவுக்கு வரும் அகதிகளை, நௌரு மற்றும் பாப்புவா நியுகினித் தீவுகளில் அமைக்கப்படும் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, இந்த மாதத்தில் மட்டும் 1,900த்துக்கும் அதிகமான அகதிகள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். அவர்களுள் அதிகமானவர்கள் இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த ஆண்டில் 9,000த்துக்கும் அதிகமான அகதிகள் அங்கு சென்றுள்ளதுடன், அங்குள்ள முகாம்களில் மிகவும் நெருக்கடியான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நேர்மையானர்வகள் என்று நிரூபிக்கப்பட்ட அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்படாது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் Jason Clare தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.