2012-08-25 15:18:34

ஜாம்பியாவை “ஒரு கிறிஸ்தவ நாடு” என்று அறிவிக்கும் பரிந்துரைக்கு ஆயர்கள் எதிர்ப்பு


ஆக.25,2012. ஜாம்பிய நாட்டுப் புதிய அரசியல் அமைப்பின் முன்னுரையில் அந்நாட்டை “ஒரு கிறிஸ்தவ நாடு” என்று அறிவிக்கும் பரிந்துரைக்கு அந்நாட்டு ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய அரசியல் அமைப்பு குறித்த தங்கள் பரிந்துரைகளை வெளியிட்டுள்ள ஆயர்கள், ஜாம்பியாவை “ஒரு கிறிஸ்தவ நாடு” என்று அரசியல் அமைப்பில் அறிவிப்பதால் மட்டும் அந்நாடு கிறிஸ்தவ விழுமியஙகளையும் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளையும் அனுசரிக்காது என்று சொல்லியுள்ளனர்.
ஜாம்பியா, பல சமயத்தவரைக் கொண்ட நாடு என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள ஆயர்கள், அரசும் திருஅவையும் தனித்தனியானவை என்ற கொள்கையை இழக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
ஜாம்பியாவில் தற்போது சில குறிப்பிட்ட விவகாரங்களில் கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மரணதண்டனையும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு, மரணதண்டனை, கருணைக்கொலை ஆகியவற்றுக்குப் புதிய அரசியல் அமைப்பில் ஆதரவளிக்கக் கூடாது எனவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.