2012-08-24 17:27:27

ஆசிய நாடுகளுக்குக் கடத்தப்படவிருந்த 16,000 கடற்குதிரைகள் பெரு நாட்டில் பறிமுதல்


ஆக.24,2012. சீனா, ஜப்பான் உட்பட ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 16,000 உலர்ந்த கடற்குதிரைகளை பெரு நாட்டின் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பெரு நாட்டு லீமா நகர் விமானநிலையத்தில் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட இக்கடற்குதிரைகள், 2,50,000 டாலர்கள் வரை விற்பனையாகலாம் என காவல்துறை அதிகாரி Victor Fernandez தெரிவித்தார்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கடற்குதிரைகளின் தூள், பாரம்பரிய மருந்துகளுக்கும், பாலுணர்வுப் பயன்பாடுகளுக்கும் அரிய மருத்துவத்திற்குமெனப் பயன்படுத்தப்படுகின்றது.
தென் அமெரிக்க நாடாடன பெரு கடற்பகுதியில் கடற்குதிரைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. இந்நாட்டில் இவற்றைப் பிடிப்பது 2004ம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.