2012-08-23 16:06:53

சிரியாவில் பட்டினியாலும், நோயாலும் பாதிக்கப்பட்டுள்ள 12,000 கிரேக்கக் கத்தோலிக்க விசுவாசிகள்


ஆக.23,2012. சிரியா நாட்டின் Rableh என்ற கிராமத்தில் துன்புறும் 12000 கிரேக்கக் கத்தோலிக்க விசுவாசிகளைக் காப்பாற்றுமாறு முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregorios III Laham உலகின் அனைத்து அரசுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
Rableh கிராமத்தில் வாழும் இம்மக்கள் வெளி உலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இன்றி கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக துண்டிக்கப்பட்டு, பட்டினியாலும், நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறியது.
சிரியாவின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முன்னர், அங்கு மிகவும் நலிந்த நிலையில் வாடும் மக்களைக் காப்பது அகில உலக மனிதாபிமான அமைப்புக்களின் நிர்ப்பந்தம் என்று திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பன்னாட்டு உதவிகளும் உணவுப் பொருட்களும் சிரியாவை அடைந்துள்ளது என்றாலும், பிணைக் கைதிகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் Rableh கிராமத்து மக்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்காமல் அரசுக்கு எதிராகப் போரிட்டு வரும் குழுக்கள் உதவிகளைத் தடுத்து வருகின்றன என்று Fides செய்தி கூறியது.








All the contents on this site are copyrighted ©.