2012-08-22 16:09:47

கண்ணாடி அணியாமல் பார்க்கக்கூடிய முப்பரிமாணப் படங்கள் விரைவில் அறிமுகம்


ஆக.22,2012. முப்பரிமாணப் படங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பமொன்று விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதுவரை ‘ப்ளூரே’ (Blu-ray) தொழில்நுட்பத்தில் வெளிவந்துள்ள முப்பரிமாணப் படங்களில் ஒரு காட்சி இரண்டு வடிவங்களில் இருக்கும். ஆனால் ஒரே காட்சியை 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் பார்க்கவேண்டும் எனில், அதற்கு autostereoscopic display தேவைப்படும்.
ஜெர்மனியைச் சேர்ந்த Heinrich Hertz Instituteல் உள்ள Fraunhofer Institute for Telecommunications நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் autostereoscopic display அடங்கிய ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இப்புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் முப்பரிமாணப் படங்களை, அதற்கென அணியப்படும் சிறப்புக் கண்ணாடி அணியாமல் தொலைக்காட்சியின் மூலம் நேரடியாகப் பார்த்து மகிழலாம்.
இம்மாதம் 31ம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெர்லினில் நடைபெற உள்ள IFA வர்த்தகக் கண்காட்சியில் இத்தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.