2012-08-22 16:08:29

"அமைதியற்ற உள்ளம்" - புனித அகஸ்தின் பற்றிய ஒரு திரைப்படம்


ஆக.22,2012. "அமைதியற்ற உள்ளம்" (“Restless Heart”) என்ற பெயர்தாங்கிய புனித அகஸ்தின் பற்றிய ஒரு திரைப்படம் வெளியிடப்படும் நிலையில் உள்ளது என இயேசு சபையினர் நடத்திவரும் Ignatius அச்சகம் அறிவித்துள்ளது.
Christian Duguay என்ற இயக்குனரால் உருவாக்கப்பட்ட புனித அகஸ்தின் என்ற தொலைக்காட்சித் தொடரை Ignatius அச்சகத்தார் ஒரு திரைப்படமாக தற்போது வெளியிட உள்ளனர்.
2009ம் ஆண்டு இத்தாலிய மொழியில் உருவான இத்தொலைக்காட்சிப் படம் அவ்வாண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தைக்குத் தனிப்பட்ட வகையில் காண்பிக்கப்பட்டபோது, திரைப்படத்தை உருவாக்கிய அனைவரையும் அவர் பாராட்டினார்.ஆகஸ்ட் 27ம் தேதி அகஸ்தினின் தாய் புனித மோனிகா அவர்களின் திருநாளும், அதற்கு அடுத்த நாள் புனித அகஸ்தின் திருநாளும் தொடர்ந்து வருவதையொட்டி, இத்திரைப்படம் அமெரிக்காவின் பல திரையரங்குகளில் வர்த்தக ரீதியில்லாத வகையில் காண்பிக்கப்படும் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.