2012-08-21 16:23:11

இலங்கையில் புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மையால் ஒரு நாளைக்கு 650 பேர் மரணம்


ஆக.21,2012. ஏறத்தாழ 2 கோடியே 10 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் ஒரு நாளைக்கு 650 பேர் வீதம் இறக்கின்றனர் என்று அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகத்தின் உதவிச் செயலர் Palitha Mahipala அறிவித்தார்.
56 விழுக்காட்டினர் இதயம் தொடர்புடைய நோய்களாலும், 10.6 விழுக்காட்டினர் சுவாசம் தொடர்புடைய நோய்களாலும், 26 விழுக்காட்டினர் போதுமான உடற்பயிற்சியின்மையாலும் இறக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
புகைப்பிடித்தல், மது அருந்துதல், முறையற்ற உணவுப் பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை ஆகியவை இவ்விறப்புகளுக்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவித்த Mahipala, இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு 23 இலட்சம் அமெரிக்க டாலர் கொண்ட திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார்.
இலங்கையில் ஒரு நாளில் 1,250 குழந்தைகள் பிறக்கும் அதேவேளை, ஒரு நாளில் ஏறக்குறைய ஆயிரம் இறப்புகள் இடம்பெறுகின்றன, இவற்றில் 65 விழுக்காட்டுக்கு, இதய நோய்கள், மூளையில் இரத்தக்கசிவு, புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகியவை காரணங்கள் என்றும் Mahipala அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.