2012-08-14 17:02:33

யாழில் மட்டும் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர்: யாழ் ஆயர்


ஆக.14,2012. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் போருக்குப் பின்னர் குறைக்கப்பட்டு மீண்டும் தத்தம் இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கைக்கு எதிராக தற்போது யாழ்ப்பாணத்தை மட்டும் கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் இராணுவத்தினர் சூழ்ந்திருக்கிறார்கள் என யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
இராணுவம் மேலும் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பது, மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதிக்கிறது என உரைத்த ஆயர், சில இடங்களில் தமிழர்களை மீன்பிடிக்கக் கூட இராணுவம் அனுமதிக்காத நிலையில், சிங்கள மீனவர்கள் இராணுவத்தின் உதவியோடு மீன்பிடிப்பது, தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான உணர்வுகளை எழுப்பியுள்ளது என கவலையை வெளியிட்டார்.
வன்னிப் பகுதிகளில் நிலைமை கடுமையாக இருப்பதாகவும், புலிகள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் இராணுவத்தினர் மத்தியில் காணப்படுவதாகவும் ஆயர் சௌந்தரநாயகம் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.