2012-08-11 16:39:31

இஸ்லாமிய, கிறிஸ்தவ தலித் மக்களுக்கு உரிமை வேண்டி கறுப்பு தினம்


ஆக.11,2012. இந்தியாவில் இஸ்லாமியத்திலும் கிறிஸ்தவத்திலும் உள்ளதலித் மக்களுக்கு, அவர்களுக்கேயுரியஉரிமைகள் எவ்விதபாகுபாடுமின்றி வழங்கப்படவேண்டும் என்றவேண்டுகோளுடன் இவ்விரு மதங்களின் பிரதிநிதிகள் இவ்வெள்ளியன்று கறுப்பு தினத்தைக் கடைபிடித்தனர்.
காலதாமதமானநீதி என்பது மறுக்கப்பட்டநீதிக்குச் சமம் என இந்தகறுப்பு தினப் பேரணியில் கலந்துகொண்டோருக்கு உரையாற்றிய டெல்லி பேராயர் Vincent Concessao, இன்னும் காத்திருத்தல் இயலாது என உரைத்தார்.
இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்திய வட இந்திய கிறிஸ்தவ சபையின் பொதுச்செயலர் Alwan Masih, நாடு முன்னேற வேண்டுமெனில் அனைத்து சமூகங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என உரைத்தார்.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தலித் மக்களுக்கும், ஏனைய மதத்தில் உள்ள இதே இன மக்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்து, நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் நடத்தப்பட்ட இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை, தலித் கிறிஸ்தவர்களின் தேசிய அவை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.








All the contents on this site are copyrighted ©.