2012-08-09 16:31:23

செவ்வாய் கோளத்தின் வண்ணப் புகைப்படத்தை அனுப்பியது கியூரியாசிட்டி


ஆக.09,2012. செவ்வாய் கோளத்தில் தரையிறங்கியுள்ள அமெரிக்காவின் ‘கியூரியாசிட்டி’ விண்கலம் அக்கோளத்தின் வண்ணப் புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பியிருந்த கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கோள ஆய்வில் ஈடுபட்டுவருகின்றது. கடந்த ஞாயிறு இரவு செவ்வாயில் தரையிறங்கிய கியூரியாசிட்டி இதுவரை கருப்பு-வெள்ளை புகைப்படங்களையே அனுப்பியிருந்தது.
இந்நிலையில் தற்போது வண்ணப் படமொன்றை அனுப்பியுள்ளது. இந்த வண்ணப் படமும் இரண்டரை நிமிட வீடியோ படமாக இருப்பதாக அறவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்க்கும்போது செவ்வாய் கோளத்தில் தரைதளம் மிகவும் இளகி உள்ளதாகத் தெரிகிறது என்றும் அறவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கோளத்தில் தடம் பதித்துள்ள கியூரியாசிட்டி விண்கலம் இன்னும் இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வைத் தொடரும் என்று தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவில் செவ்வாய் கோளத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்பது தெளிவாகும் எனவும் அறவியலாளர்கள் கருதுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.