2012-08-07 15:53:59

ஜோஸ் நகர் பேராயர் மசூதியைப் பார்வையிட்டு ஒற்றுமைக்கு அழைப்பு


ஆக.07,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மத்தியில் ஒற்றுமையும் அமைதியும் ஏற்படுமாறு அந்நாட்டு ஜோஸ் நகர் மசூதியில் கேட்டுக் கொண்டார் அந்நகர் கத்தோலிக்கப் பேராயர் Ignatius Ayau Kaigama.
கடந்த வாரத்தில் ஜோஸ் நகர் மசூதிக்குச் சென்று தலைமை முஸ்லீம் குரு Sheikh Balarabe Dawudவைச் சந்தித்துப் பேசிய ஜோஸ் நகர் பேராயர் Kaigama, நைஜீரியாவில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சந்திக்கவே முடியாது என்ற எண்ணத்தை அகற்றும் நோக்கத்தில் இந்த மைய மசூதிக்குத் தான் வருகை தந்ததாகத் தெரிவித்தார்.
நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்றும், சிலநேரங்களில் பிரச்சனைகளும் பதட்டநிலைகளும் ஏற்படலாம், அவற்றைக் கண்டு நாம் ஒருவர் ஒருவர் மீது பயம் கொள்ளத் தேவையில்லை, அப்பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் பேராயர் Kaigama கூறினார்.
நம் அனைவருக்கும் ஒரே கடவுள், நாம் கடவுளின் பிள்ளைகள் போன்று நடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, மத்திய நைஜீரியாவிலுள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, இத்திங்கள் இரவு வெளியிலிருந்து துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் இறந்துள்ளனர். எத்தனைபேர் காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இச்செவ்வாய் காலை அவ்வாலயத்தைப் பார்த்த இராணுவத்தினர் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.