2012-08-06 16:46:40

ஹிரோஷிமா மக்கள் அணுசக்தியற்ற உலகுக்கு அழைப்பு


ஆக.06,2012. ஜப்பானின் ஹிரோஷிமா நகர் அணுகுண்டு தாக்குதலின் அழிவுக்குள்ளாக்கப்பட்ட 67ம் ஆண்டு நினைவை அந்நகரில் 50,000 மக்கள் ஒன்று கூடி சிறப்பித்தனர்.
ஹிரோஷிமா நகர் அணுகுண்டு வீச்சின் தாக்குதலுக்கு உள்ளானவர்களும் அண்மை ஃபுக்குஷிமா அணு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், அணு ஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவும், அணுசக்தியற்ற சமுதாயத்தைப் படைக்கவும் அழைப்பு விடப்பட்டது.
எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்குபெற்ற இந்த நிகழ்வில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா, ஹீரோஷீமா மேயர் Kazumi Matsui உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி நில நடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுக்குஷிமா அணு ஆலை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து 50 அணு ஆலைகளையும் மூடிய ஜப்பான் அரசு, தற்போது மின்சக்தி தேவையை முன்னிட்டு இரண்டு ஆலைகளை மட்டும் திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.