2012-08-06 16:31:25

திருத்தந்தையின் லெபனன் பயணத்திற்கு காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் வரவேற்பு


ஆக.06,2012. வரும் மாதம் லெபனனில் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு அந்நாட்டு காப்டிக் ரீதி கத்தோலிக்க திரு அவையின் சார்பில் தன் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் வெளியிட்டு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் காப்டிக் ரீதியின் முதுபெரும் தலைவர் கர்தினால் Anba Boulos Najib.
மத்திய கிழக்குப்பகுதி திரு அவைகளுக்கென நடத்தப்பட்ட சிறப்பு ஆயர் பேரவையின் இறுதி அறிக்கையை வெளியிடவரும் திருத்தந்தையின் இப்பயணம், அன்னைமரி எலிசபெத்தைச் சந்தித்ததை ஒத்திருக்கிறது என விவிலிய நிகழ்வை தன் செய்தியில் மேற்கோள் காட்டியுள்ள கர்தினால், திருத்தந்தையின் திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு அத்தியாவசியமான ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு ஆயர் மாநாட்டின் இறுதி அறிக்கை மத்தியக்கிழக்குப்பகுதி மக்களை வழிநடத்த கத்தோலிக்கத் தலைவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும், மற்றும் திருத்தந்தையின் திருப்பயணம் அப்பகுதி மக்களுக்கு அமைதியையும் இணக்க வாழ்வையும் கொண்டு வருவதோடு நம்பிக்கையுடன் வாழ்வில் நடைபோட உதவும் என்ற தன் நம்பிக்கையும் தன் செய்தியில் வெளீயிட்டுள்ளார் காப்டிக் ரீதியின் முதுபெரும் தலைவர் கர்தினால் Anba Boulos Najib.








All the contents on this site are copyrighted ©.