2012-08-06 16:43:56

உலகில் அமைதி வேண்டி போலந்து பக்தர்களுடன் இராணுவ வீரர்களும் நடைப்பயணம்


ஆக.06,2012. உலகில் அமைதிவேண்டி போலந்தின் Warsaw நகரிலிருந்து 5000க்கும் மேற்பட்ட மக்கள் நான்கு குழுக்களாக அந்நாட்டின் Jasna Gora மரியன்னை திருத்தலம் நோக்கி கடந்த சனிக்கிழமையன்று நடைப்பயணத்தைத் துவக்கினர்.
700 இராணுவ வீரர்கள் கொண்ட குழுவும் இதில் ஒன்றாகும். இந்த இராணுவ வீரர்களுள் ஏறத்தாழ நூறுபேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
'சாட்சியம் வழங்குக' என்ற விருதுவாக்குடன் இடம்பெறும் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்வோருக்கு, இராணுவத்தினரிடையேப் பணியாற்றும் ஆயர் Jozef Guzdek திருப்பலி நிறைவேற்றி, இப்பயணத்தைத் துவக்கி வைத்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினரிடையே பணியாற்றும் ஆயர் Richard Spencer, Jasna Gora மரியன்னை திருத்தலத்தில் இராணுவத்தினரை சந்திப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கென நடைப்பயணம் மேற்கொள்ளும் இந்த பல்வேறு நாடுகளின் இராணுவ வீரர்கள், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தாலும், கத்தோலிக்க திருஅவை எனும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாக இந்த நடைப்பயணத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார் போலந்து ஆயர் Guzdek.








All the contents on this site are copyrighted ©.