2012-08-04 14:59:02

வறுமை, நீதி குறித்து மறையுரையாற்றியதற்காக ஜாம்பியா நாட்டிலிருந்து அருட்பணியாளர் வெளியேற்றம்


ஆக.04,2012. திருப்பலியின்போது வறுமை மற்றும் ஏழைகளுக்கு நீதி குறித்து மறையுரை நிகழ்த்தியதற்காக கேள்வி கேட்கப்பட்டு இரண்டு நாள்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் ருவாண்டா நாட்டு அருட்பணியாளர் ஒருவர்.
ஜாம்பியா நாட்டின் Lundazi பங்குக் குருவாகப் பணியாற்றிய ருவாண்டா நாட்டு Viateur Banyangandora என்ற 40 வயது அருட்பணியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்றுரைத்த உள்துறை அமைச்சர் Edgar Lungu அதற்கான காரணத்தைச் சொல்ல மறுத்துவிட்டார் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஆயினும், ஜாம்பியாவின் அமைதிக்கும் ஒழுங்குக்கும் இக்கரு அச்சுறுத்தலாய் இருந்தார் எனக் கண்டுபிடிக்கப்பட்டதாக Lungu கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.