2012-08-01 15:17:27

கவிதைக்கனவுகள் - கலில் கிப்ரான் கவிதை - என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !


என் ஆத்மாவே ! நீ ஏன் அழுகிறாய் ?
என் பலவீனத்தை நீ அறியாயோ ?
உன் கண்ணீரின் கூர்மை காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம் என்பிழை தெரியா தெனக்கு !

உன் உபதேசங்களைக் கவனமாய் நான்
பின்பற்றி இரை யானது என் வாழ்வு முழுவதும் !
எப்படி நோகிறது பார் என் இதயம் ?
களைத்துப் போனது என் வாழ்க்கை
பின்பற்றி உன்னை !

வாலிப வயதெனக்கு வழங்கியது
வாழ்வில் ஓர் நம்பிக்கை !
கண்டிக்கும் அது என்னை இப்போது
கவனக் குறைவால் பேணிப் பாராததால் !
எப்போதும் ஏன் என்னை வற்புறுத் துகிறாய்
என் ஆத்மாவே ?

எனது இன்பங்களை எல்லாம் புறக்க ணித்தேன் !
உன் அறிவுரைக் குடன்பட்டு
என்மீது புகுத்திய
உன் நியதியைப் பின்பற்றி
வாழ்வின் பூரிப்பைத்
துறந்தேன் !
நீதி வழங்கு நீ எனக்கு !
அல்லது
கொடு மரணத்தை
விடுவிக்க என்னை
நியாயமே உனது உன்னத
நெறியான தால் !

என் மீது பரிவு காட்டு
என் ஆத்மாவே !
என் மீது அன்பை
ஏற்றி இருக்கிறாய்
என்னால்
சுமக்க முடியாப் பளுவாய் !
நீயும் அன்பும்
இணை பிரியா வல்லினம் !
ஆனால்
நானும் செல்வமும்
இணை பிரியா பலவீனம் !
எப்போ தாவது
போராட்டம் நின்று விடுமா
வல்லினத் துக்கும்
மெல்லினத் துக்கும் இடையே ?


இரவின் மௌன வேளையில்
தேவனைக் காணச் சென்று
இனித்திடும்
தரிசனம் பெறுவாய் !
ஆயினும் இந்த உடல் என்றும்
முடங்கிக் கிடக்கும்
பிரிவிலும்
நம்பிக்கை இழப்பிலும்
கசப்ப டைந்து !
இதுதான் எனக்குச் சித்திரவதை
என் ஆத்மாவே !
பரிவு காட்டு என்மீது
என் ஆத்மாவே !








All the contents on this site are copyrighted ©.