2012-07-31 16:04:56

பிரதமரின் பயணம் அசாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு உதவியுள்ளது


ஜூலை,31,2012. இன வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட்டுள்ளது, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்கு பிறரன்பு நிறுவனங்களுக்கு உதவியுள்ளது என யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.
வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் போடோ பழங்குடி இன மக்களுக்கும், மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து குடியேறியுள்ள முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரங்களில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 4 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் 235 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரின் பயணம் பற்றிக் கூறிய Bongaigaon மறைமாவட்ட பேச்சாளர் அருட்பணி தாமஸ் டி சில்வா, பிரதமரின் பயணம் நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு வழி அமைத்துள்ளது என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.