2012-07-31 15:50:24

உலகில் இடம்பெறும் 91 விழுக்காட்டு தாய்மைப்பேறு இறப்புகள் தடுத்து நிறுத்தக்கூடியவை


ஜூலை,31,2012. உலகில் இடம்பெறும் 91 விழுக்காட்டு தாய்மைப்பேறு இறப்புகள் தடுத்து நிறுத்தக்கூடியவை என்பதால் தாய்மை மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறப்பின்போதும் போதிய கவனம் செலுத்தப்படாததால் ஆண்டுதோறும் 3 இலட்சத்து 33 ஆயிரம் பெண்கள் இறக்கின்றனர் என்றும் அந்நிறுவனம் கூறியது.
இவ்விறப்புக்களில் 99 விழுக்காடு வளரும் நாடுகளில், குறிப்பாக, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் இடம்பெறுகின்றது என்று அந்நிறுவனம் மேலும் கூறியது.







All the contents on this site are copyrighted ©.