2012-07-30 16:56:48

மியான்மார் கலவரத்தில் எண்பதாயிரம் பேர் இடம்பெயர்வு, ஐ.நா.


ஜூலை,30,2012. மியான்மாரின் வடபகுதியில் Rakhine மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரங்களைத் தொடர்ந்து சுமார் எண்பதாயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா. அமைப்பின் அகதிகளுக்கான நிறுவனமான UNHCR அறிவித்துள்ளது.
இப்படி வெளியேறியவர்கள் முகாம்களில் வாழ்ந்து வருவதாகவும், அவசர இருப்பிடத் தேவைகளுக்காக, இன்னும் அதிகமாகக் கூடாரங்கள் விமானமூலம் கொண்டுவரப்படுவதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Rakhine மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவது இன்னும் தொடர்ந்து நடைபெறுவது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கவலை தெரிவித்திருப்பதுடன், இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மியான்மார் காவல் துறையினர், சிறுபான்மையின மக்களை, குறிப்பாக Rohingya இசுலாமிய இன மக்களை இலக்கு வைத்து தாக்குவதாக கூறப்படுவதாகவும் நவிபிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.