2012-07-30 16:17:59

கவிதைக் கனவுகள் - இறைவன் இருக்குமிடம்


ஆலயத்தில் பல மணிநேரம் செலவிட்ட
பக்தர் ஒருவர் வாட்டத்தோடு வெளியே வந்தார்
ஆலய வாசலில் அமர்ந்திருந்த கந்தலாடைக்காரர்
அந்தப் பக்தரிடம் கையேந்தினார்.
காசும் போடவில்லை. மலர்ச்சியும் இல்லை முகத்தில்.
அலட்சியமாக நடந்தார் பக்தர்.
இடைமறித்தார் வழியில் இன்னொருவர்
சோகத்துக்குச் சோறு போட நினைத்தார்.
இறைவனைத் தேடுகிறேன், அவரோடு பேச விரும்புகிறேன்
ஆலயத்தில் பல மணி நேரங்களைச் செலவிட்டேன்
வெறுமனே வெளியே வந்தேன்.
பகத்ரின் விரக்தி பேச வைத்தது அவரை.
நீ இறைவனைத் தேட விரும்பினால்
முதலில் மனிதரைத் தேடு.
மற்ற எல்லா பொருள்களைக் காட்டிலும்
மனிதரிடமே சிறப்பாக இருக்கிறது தெய்வீகசக்தி.
ஆலய வாசலில் கையேந்திய கந்தலாடை
மனிதரில் இறைவன் இருக்கிறார்.
சாலையைக் கடக்க உதவி தேடும்
முதியோரில் அவர் இருக்கிறார்.
உனது மன்னிப்புக்காகக் காத்திருக்கும் உனது எதிராளியிடம்
அவர் இருக்கிறார்.
நீ இறைவனைத் தேட விரும்பினால்
முதலில் மனிதரைத் தேடு.
இளமையிலேயே இறைவனைத் தேடுபவர்
நற்பேறுபெற்றவர்.







All the contents on this site are copyrighted ©.