2012-07-28 15:19:19

கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனங்கள் அசாமில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல இயலவில்லை


ஜூலை,28,2012. கலவரங்கள் மிகுந்துள்ள அசாமின் Kokrajhar மாவட்டத்தில் கண்டதும் சுடுவதற்கு அனுமதியளிக்கும் ஊரடங்குச் சட்டம் அமலில் இருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல இயலாமல் இருக்கின்றது என்று கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
அசாம் மாநிலத்தில் தனித்தியங்கும் போடோ இன மக்களின் தலைமையிடமான Kokrajharல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இன மற்றும் சமய வன்முறைகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. அசாமின் போடோ இன மக்களில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
இம்மாதம் 20ம் தேதி தொடங்கிய கலவரத்தில் 45 பேர் இறந்தனர். வீடுகளை இழந்துள்ள 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் நிவாரண முகாம்களாகச் செயல்பட்டு வரும் ஆலயங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.