2012-07-25 16:20:25

உடலில் தீய உயிரணுக்களை அழிக்கும் மகரந்த துகள்கள்


ஜூலை,25,2012. மலர்களில் தேன் திரட்டும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்தத் துகள்களை உணவில் சேர்த்துக்கொள்வது நலமளிக்கும் என இங்கிலாந்து மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மலர் விட்டு மலர் செல்லும்போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்தத் துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளால் நமது உயிரணுக்கள் பாதிக்கப்படுகின்றன, நல்ல உயிரணுக்கள் அழிந்து தீய உயிரணுக்கள் அதிகரிப்பதுதான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாகின்றன என்று கூறிய மருத்துவர் சாரா ஷங்கர், உயிரணுக்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவும் Anti-oxidantகள் மலர்களின் மகரந்தத் துகள்களில் அதிகம் உள்ளன என்றும் கூறினார்.மகரந்தத் துகள்களை உணவின் மீது தூவியோ, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்தத் துகள்கள் சுத்தம் செய்யப்பட்டு இலண்டனில் உள்ள கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.