2012-07-24 16:03:30

சிரியா அகதிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது: லெபனன் காரித்தாஸ் இயக்குனர்


ஜூலை,24,2012. சிரியா எல்லைப் பகுதியிலுள்ள லெபனன் அகதிகள் முகாம்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், சிரியாவில் இடம்பெறும் சண்டைகளுக்குப் பயந்து தினமும் ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைகளைக் கடப்பதாகவும் லெபனன் காரித்தாஸ் இயக்குனர் அருட்பணி Simon Faddoul கூறினார்.
இம்மக்களின் துன்பங்கள் சொல்லும் தரமன்று என ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறிய அருட்பணி Faddoul, எங்கு சென்றாலும் ஏமாற்றம், வெறுப்பு, பழிவாங்குதல் போன்ற அழுகைச் சப்தங்களையே கேட்க முடிகின்றது, இவர்களில் பலர் கடவுள் தங்களை கைவிட்டு விட்டதாக உணருகின்றனர் என்று தெரிவித்தார்.
இச்செவ்வாயன்று மட்டும் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் எல்லைகளைக் கடந்துள்ளனர், சிரியாவுக்கும் லெபனனுக்கும் இடையே வடக்கிலுள்ள Bekaa பள்ளத்தாக்கு அகதிகள் முகாம்களில் வாழும் 47 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களில் பெரும்பாலானோர் சுன்னி முஸ்லீம்கள். கிறிஸ்தவர்கள் 5 விழுக்காட்டினர் மட்டுமே என்றும் அக்குரு கூறினார்.
மேற்கத்திய நாடுகள் சிரியாவை மறந்து விடாமல் உடனடியான போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அருட்பணி Faddoul கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.