2012-07-24 16:01:41

சண்டை தீவிரமடைந்துள்ள சிரியாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது, ஆயர் கவலை


ஜூலை,24,2012. சிரியாவில் சண்டை வலுவடைந்துவரும் நிலையில், தமாஸ்கஸ் மற்றும் அலெப்போவில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் மூத்த ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
தமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் வாழும் கிறிஸ்தவர்கள் தாங்கள் குறிவைத்து தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வாழ்வதாகக் கூறினார் அலெப்போவின் கல்தேயரீதி கத்தோலிக்க ஆயர் Antoine Audo.
இவ்வாண்டு வசந்த காலத்தில் ஹோம்ஸ் நகரில் கடும் சண்டை இடம்பெற்றபோது கிறிஸ்தவர்கள் வாழ்ந்த பகுதி முழுவதும் கடும் தாக்குதலுக்கு உள்ளானதால் ஏறக்குறைய எல்லாரும், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறியதைக் குறிப்பிட்டார் ஆயர் Audo.
சண்டை தீவிரமடைந்துவரும் நிலையில் மக்கள் தன்னை அணுகுவதாகவும், தங்களது உடமைகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதாகவும் ஆயர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.